1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி ஒன்று வலியுறுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் சீனாவின் யுவான் வாங் 5 என்ற நீர்மூழ்கிக் கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்காத இலங்கை அரசாங்கத்தின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.