ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் மொட்டு கட்சியில் இருந்து கொண்டு வந்த ஜனாதிபதி. இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு சில இயலாமைகள் இருந்தன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் அவர் இன்னும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இது கோட்டாபய ராஜபக்ச “பெயில்” கதையல்ல, இந்த சமூக பிரச்சினைகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்றே கூறுகின்றேன்.
ஆனால், ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக உலக வரலாற்றில், மிக உயர்ந்த இடத்தில் அவர் இடம் பெறுவார். போராட்டக்காரர்கள் தனது தனிப்பட்ட வீட்டிற்குச் சென்றபோது கூட அவர், எந்த முடிவும் எடுக்கவில்லை. அவருடைய அரச வாசஸ்தலத்திற்கு வந்து அடித்த போது கூட எதுவும் செய்யாமல், இலங்கையை விட்டு வெளியேறினார்.
எனவே அவருக்கு ஜனநாயகம் மிகவும் அதிகமாக உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.