இலங்கையில் தற்போது ஏற்படுள்ள நெருக்கடிக்கு உதவி செய்வதற்காக அரபு நாடொன்று முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களைக் கடந்து நிலையான மற்றும் அமைதியான சூழலை அடைவதற்கு உதவுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாக உரையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடி உள்ளனர்.
இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களைக் கடந்து நிலையான மற்றும் அமைதியான சூழலை அடைவதற்கு தேவைாயன உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.