குறுகிய காலத்துக்காக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை பிரதிநிதியொருவரை நாட்டின் பிரதமராக நியமிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
நளின் பண்டார பரிந்துரைத்துள்ளார்.
அத்துடன் நாட்டை இந்தளவுக்கு நெருக்கடிக்குள்ளாக்கிய அஜித் நிவாட் கப்ரால்இ பி.பி.ஜயசுதந்தர உள்ளிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.