தற்போதைய அரசாங்கம் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு வருகிறது. நடாளுமன்றில் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலகம் எதிர்பார்த்த அரசியல் ஸ்திரத்தன்மை தற்போது நாடாளுமன்றின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் 5 வருடங்களுக்கே மக்கள் பிரதிநிதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எனவே, தற்போதைய அரசாங்கம் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரமாக இயங்கும் எனவும் அதற்கு பின்னரே தேர்தல் ஒன்றிக்கு செல்ல முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.