
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அத்துமீறி நுழைந்து தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 18 மற்றும் 22 வயதுடைய மடபான மற்றும் கொழும்பு 05 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.