
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
51 வயதான கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் வந்த இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.