திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட ஒருநாள் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அவசர தேவையின் நிமித்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதாயின் தமது தகவல்களை 070 63 11 711 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில், கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான திகதியை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE