
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் பலருக்கு சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார சீர்திருத்தங்களை துரிதமாக மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களைத் தவிர மற்ற அனைவரும் பல தசாப்தங்களாக சீர்திருத்தங்களை நிராகரித்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் தாமதம் ஏற்பட்டால் இலங்கையின் நிலைமை தீவிரமடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.