புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன

நாட்டின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று பதவி பிரமாணம் செய்துள்ளார்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கபட்டதை தொடர்ந்து, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியன நியமிக்கபடவுள்ளன.

இதன்படி, புதிய அமைச்சரவை அமைச்சுகள் இன்று வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர்

அலுவலகத்தில் காலை 9 மணிக்கு இதற்கான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, நாட்டில் சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்றே பல்வேறு தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது.

இன்று ஸ்தாபிக்கப்பட உள்ள அமைச்சரவை எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.