
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.