நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 75 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இன்று புதன்கிழமை இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின்போது, படையினர், பொலிஸார் – போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் குறித்த 75 பேரும் காயமடைந்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்படி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதன்போதான மோதலில் 33 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு – தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் காவல்துறை அதிகாரியொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு – ஃப்ளவர் வீதி பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டனர்.
அதன்போது, பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 42 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.