ஜனாதிபதி மாளிகைக்குள் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காயமடைந்த இரண்டு பொலிஸார் உட்பட 23 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகை அருகில் இருந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இரண்டு வாகனங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
அதனை பயன்படுத்தி பாதுகாப்புத் தரப்பினர் மீது போராட்டக்காரர்கள் தண்ணீர் பீச்சியடித்து பொலிஸாரை அங்கிருந்து கலைப்பதற்கு முயன்றுள்ளனர்.


