
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வரிசைகளில் காத்திருந்தவர்களுள் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு வரிசைகளில் நின்று உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, அவர்களுக்கான நட்டஈட்டை வழங்காவிடின், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடுவதாக ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.