
ஆப்கானில் வருமானமின்றி வேலையிழந்த அந்நாட்டு பிரபல டி.வி. நெறியாளர் தெருவோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அடுத்து அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக பலர் வேலைவாய்பின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். முதியவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.