ரஷ்யாவுடன் பகையை ஏற்படுத்தி கொள்ளவது சிறந்த விடயம் அல்ல என இலங்கை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு வர்த்தக சேவையில் இருந்து ரஷ்யாவிற்கு விமானங்கள் செல்ல கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில், பொருளாதார ரீதியில் பாதிப்புகளிற்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
அது குறித்து நீதிபதியிற்கு கூறியுள்ளேன். மீண்டும் ரஷ்யாவிற்கு விமான சேவை ஆரம்பிக்க வேண்டும். ரஷ்யாவுடன் பகை ஏற்படுத்தி கொள்ளவது சிறந்த விடயம் அல்ல.
நம் நாட்டின் தேயிலை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாரிய இலாபத்தை பெற கூடிய உற்பத்தி அது. அதே போல கடந்த வருடம் ரஷ்யா நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
எனவே நான் இது குறித்து ரஷ்யா வெளிவிவகார அமைச்சிடம் கலந்துரையாடி மனஸ்தாபத்தை நிவர்த்தி செய்து கொண்டேன்.
அவரும் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் உதவிகளை வழங்க உத்தேசித்துள்ளார். மற்றும் எதிர்வரும் காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என நம்புகிறேன்.
ஏரோப்லட் மற்றும் ஐரீஸ் எனும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே இச் சேவைகள் இயங்குகின்றன. அவற்றுள் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் காரணமாகவே இப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. – என்றார்.