இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது குறித்து பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்நாட்டு மக்களின் பாவனைக்காக ஒரு தொகை உருளைக்கிழங்கை வழங்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், இந்த உறுதியை தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சம்மேளனத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவன் வீரகோனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வழங்கியுள்ளார்.
பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் சார்க் பொதுச் செயலாளர் எசல ருவான் வீரகோன் ஆகியோருக்கு இடையில் பங்களாதேஷில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.