இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் நாட்டில் வேலைவாய்ப்பு இன்மையும் கடுமையாக அதிகரித்து வருகின்றது.
அதேவேளை மறுபுறம் நாட்டினை விட்டு சட்டவிரோதமான முறையில் உயிரை பணயம் வைத்து அகதிகளாக வெளியேறுகின்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
மேலும், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 288,648 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் மட்டும் முந்நூற்று எண்பத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆறு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாடுகளில் தொழில் புரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு (2022) ஜனவரியில் 52,278, பிப்ரவரியில் 55,381, மார்ச்சில் 74,890, ஏப்ரலில் 53,151, மே மாதத்தில் 52,945 என மொத்தம் 52,278 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடுகளுக்காக வருபவர்கள் வழமையாக சந்திப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாளாந்தம் முன்பதிவு செய்யாதவர்களால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி பல கிலோமீற்றர் தூரம் வரிசைகள் காணப்படுவதாகவும், நாளாந்தம் 1500க்கும் அதிகமானோர் சேவையாற்றி வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மாத்திரம் ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்குவதுடன், சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆவணங்களை தலைமை அலுவலகத்தில் வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கோரியுள்ளது.
மாத்தறை, குருநாகல், கண்டி, மாத்தறை மற்றும் வவுனியாவில் அலுவலகங்களில் வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 288,648 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.