தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நிலவரப்படி இன்று அதிகாலை 5:41 மணிக்கு பிலிப்பின்ஸின் தாவோ ஓரியண்டல் மாகாணத்தின் தர்கோனா நகரத்திலிருந்து தென்கிழக்கே 136 கிலோமீற்றர் தொலைவில் 96 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் முதலில் ரிச்டா் அளவுகோலில் 6.2 என்று அறிவித்தது, பின்னர் 5.7 ஆகக் குறைத்தது.
இந்த நிலநடுக்கம் மிண்டனாவ் தீவில் அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டது. டெக்டோனிக் நிலநடுக்கம் அதிர்வுகளைத் தூண்டும் ஆனால் சேதத்தை ஏற்படுத்தாது என்று நில அதிர்வு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் பசிபிக் எரிமலைப் பகுதியில் (ரிங் ஆஃப் ஃபயர்) அமைந்துள்ளதால் அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளைளுக்கு உள்ளாகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.