
இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.