
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் 20 ஆவது நாள் இன்றாகும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளிருந்தும் வரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணமுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமும் தொடர்கின்றது.
மைனாகோகம என இந்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.