போரின் விளைவாக இந்த ஆண்டு உக்ரேனின் பொருளாதாரம் 45% வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது.
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டதைவிடப் பெரிய பொருளாதார சேதம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது. பொருளாதார தடைகள், ரஷ்யாவிலும் மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளது.
வணிகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், சாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும், பல வருட முன்னேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறுகிறது.
சூரியகாந்தி கோதுமை போன்ற பயிர்களுக்கு உக்ரேன் முக்கிய ஆதாரமாக இருந்தது. ஆனால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் உலகளாவிய உணவு விலைகள் உயர்ந்துள்ளன. இதனால், உக்ரேன் ஒரு முக்கியமான வருமானத்தை இழந்துள்ளது.
பொருளாதாரத் தடைகளால், இந்த ஆண்டு ரஷ்யா 11 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.