பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியதும் பாகிஸ்தான் பாராளுமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.