இலங்கையில் நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், வடப்பகுதியிலும்,தென்னிலங்கை பகுதியிலும் உந்துருளிகளில் படையினரின் வருகை என்பது தற்போது படுகொலைகளை அரங்கேற்றுவதற்கான முன்னோடியாக காணப்படுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், இலங்கை முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது முகமூடி அணிந்து போராட்ட இடங்களுக்குள் நுழைந்துள்ள படையினர் குறித்து இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தெளிவாக தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள் படையணியானது அரசாங்கத்திற்கு எதிராக போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியா வாழ் கலாநிதி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.