
பத்தரமுல்லா போல்துஹுவில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாருக்கு ரோஜா பூக்களை வழங்கினர். எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் பொலிஸாரின் தடையைத் தள்ள முயன்றபோது, பொலிசார் கண்ணீர் குண்டுகளையும் தண்ணீரையும் பயன்படுத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.