முகக் கவசத்தின் விலையை இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதனை அச் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவிக்கின்றார். டொலருக்கான பெறுமதி அதிகரித்துள்ளமையினால், முகக் கவசத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமையினாலேயே இந்த தீர்மானத்தை எட்டியதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, தற்போது 15 முதல் 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் முகக் கவசத்தின் புதிய விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.