ஹாங்காங், தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ளதால் சீனாவில் 1.7 கோடி மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு அதிகரிப்பால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகவும் வேகமாக பரவக்கூடிய உருமாறிய ஒமிக்ரான் மற்றும் அறிகுறியற்ற வைரஸ் தொற்றுகளால் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்குமா? என்ற அச்சம் நிலவி வருகிறது.
சீனாவின் வடகிழக்கு பகுதியான ஜிலினில் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. வடகொரியா எல்லையில் கிட்டத்தட்ட 7,00,000 பேர் மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற பகுதியான யாஞ்சியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மக்கள் வீட்டிலிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3,400 பேருக்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது சீனாவில் 18 மாகாணங்களில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ்கள் வேகமாக பரவி வருவதால் தினசரி தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.