
உக்ரைன் – ரஷ்யா தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.