உ க்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன.
ஆனால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷ்யாவை எதிர்த்து இதுவரை போரிடவில்லை.
இந்நிலையில், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உரையாற்றினார்.
இதன்போது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம்.
அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அதிக செலவு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுகின்றனர்.
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புட்டின் நினைத்துவிட்டார்.
மேலும், உக்ரைன் போருக்கு மேற்குலக நாடுகளின் பதிலளிப்பை புட்டின் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.
புட்டின் தவறாக நினைத்துவிட்டார். நாங்கள் தயார்’ எனத் தெரிவித்தார்.