கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனில் ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து வருகிறது. ராணுவ தளங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கார்கிவ் நகரின் சுகுவேவ் என்ற இடத்தில் வசிக்கும் ஆசிரியை ஒலேனா குரிலே, 52, என்பவர் வீட்டின் மீதும் ஏவுகணை விழுந்தது.
இதில் அவரது வீடு முற்றிலும் நாசம் அடைந்தது. ஆனால், குரிலே பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். முகம் முழுதும் கண்ணாடி துகள்களுடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தில் ரத்தக் காயத்துடன் கட்டுப்போட்ட குரிலேவின் படம் சமூக வலைதளங்களில், ‘போர் முகம்’ என்ற பெயரில் வேகமாக பரவி வருகிறது.