‘நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்கவும், கிழக்கில் உள்ள அந்த நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கண்காணிப்பில் ஈடுபடவும் தான் அமெரிக்க படைகள் சென்றன உக்ரைனில் போரிட ஐரோப்பாவிற்குச் செல்லவில்லை என்று ஜோ பைடன் தெரிவித்தார். உக்ரைனுக்கு அமெரிக்க படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் ஜோ பைடன், தெரிவித்துள்ளார்.”அமெரிக்க சக்தியின் முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கா பாதுகாக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேட்டோ முன்னெப்போதையும் விட ஒற்றுமையாக இருப்பதாக தான் நம்புவதாகவும், அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் தங்களுடைய ஒப்பந்த கடமைகளை நிறைவேற்றும் என்பதில் “சந்தேகமில்லை” என்றும் பைடன் தெரிவித்தார்.