அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக உள்ள இந்தியாவை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி, 44, மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில், ‘சர்ஜன் ஜெனரல்’ எனப்படும் மருத்துவத்துறை தலைவர் பொறுப்பில் இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் டாக்டர் விவேக் மூர்த்தி. இந்தியரான இவர், அமெரிக்கா மற்றும் நம் நாட்டில் வசித்த குடும்பத்தினர், 10 பேரை கொரோனா பாதிப்பில் பறிகொடுத்தவர்.இந்நிலையில், விவேக் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இருப்பினும், ௪ வயதாகும்என் மகளுக்கு தடுப்பூசி இல்லாததால், கடந்தவாரம்அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அவருடன் விளையாடிய,5 வயது மகனுக்கும் தொற்று பரவியது. இந்நிலையில், நானும் என் மனைவி அலைசும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் மக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.