கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடப்பதால், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில், போராட்டம் நடந்து வருகிறது.கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள மூன்று கல்லுாரிகளில், இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். பல மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.
போராட்டம் காரணமாக, இந்த கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் பலரும், இந்திய துாதரகத்தில் புகார் செய்துள்ளனர்.இதுபற்றி, கனடா நாட்டு கல்வித்துறையிடம் பேசி வருவதாகவும், இந்திய மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை , அவர்களுக்கு கல்லூரிகளின் நிர்வாகம் திரும்பி வழங்க வலியுறுத்தி வருவதாகவும், கனடா தலைநகர் ஒட்டவாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.