கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும், வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாக தனது பிரதமர் பணிகளை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் அனைவரும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை முதலே ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தனது அறிவிப்பில், தனக்கு கொரோனா அறிகுறிகள் தெரிவதாகவும், அதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தனக்கு கொரோனா உறுதியாகிவிட்டதாக பதிவிட்டிருக்கும் அவர், தொடர்ந்து இணைய வழியில் பணிசெய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கொரோனா உறுதியாகியிருந்தாலும், தான் நலமுடனே இருப்பதாக தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், பூஸ்டர் டோஸ் போடவும் அறிவுறுத்தியுள்ளார்.