கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது.
கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதால் 5 மாநிலங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கடலோரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6,000 அமெரிக்க விமானங்கள் இதன் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், ஒரு இலட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.