இலங்கை மின்சார சபைக்கு நியமிக்கப்பட்ட பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்காவிட்டால் இன்று நண்பகல் 12.00 மணி முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
எனினும், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் ஆதரவு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டத்தினால் மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் சுகந்த பெரேரா தெரிவித்துள்ளார்.