
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த பதினைந்து நாட்களில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
அதற்கமைய சுமார் 6,963 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவைத் தவிர இந்தியா, உக்ரைன், இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், மாலைதீவு, அவுஸ்திரேலியா, போலந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.