
மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள ,அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.