20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 3,998 ரூபாவுக்கு சதொச நிறுவனங்கள் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
10 கிலோ சூப்பர் சம்பா
1 கிலோ வெள்ளைச்சீனி
1 கிலோ சிவப்பு பருப்பு
1 கிலோ இடியப்ப மா,
500 கிராம் நெத்தலி
400 கிராம் நூடில்ஸ்
400 கிராம் உப்பு
2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 மி.லீ.பக்கெற்)
100 கிராம் மிளகாய் தூள்
100 கிராம் மஞ்சள் தூள்
100 கிராம் STC தேயிலை
80 கிராம் பொடி லோஷன்
சதொச சந்தன சவர்க்காரம்
100 மி.லீ. கை கழுவும் திரவம்
90 கிராம் சோயா மீற்
சதொச TFM சலவை சவர்க்காரம்
பப்படம் 90 கிராம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத பிரதேசங்களில் உள்ள மக்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது பொதிகளை வீடுகளுக்கு பெற முடியும் என அமைச்சர் தெரிவித்தார்