
கொரோனாத் தொற்றுப் பரவலானது பிலிப்பைன்ஸில் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மத்திரமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றும், தேவையற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் கட்டாயமாகக் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுடேர்டே எச்சரித்துள்ளார்.