தினமும் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் உணவில் என்னென்ன சத்து எவ்வளவு இருக்கனும்? பெற்றோர்களே உங்களுக்குத்தான்

ஒவ்வொரு மனித உயிருக்கும் உணவு என்பது வழ்வின் மிக முக்கிய அம்சமாகும். இளம் குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு இருக்கின்றன.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் உணவு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா? குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்னென்ன? எந்த உணவில் எந்த அளவிற்கு குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதை அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

நார்சத்து (Fiber)
நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மனித உடலின் இயல்பான இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக முக்கியமாகும்.

பொதுவான மதிப்பீடு என்னவென்றால், குழந்தைகள் ஆயிரம் கலோரிக்கு 14 கிராம் நார்ச்சத்து உள்ள பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 1500 கலோரிகளைப் பெறும் 4-8 வயது குழந்தைகளுக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது.

கால்சியம்
எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியில் கால்சியம் ஒரு முக்கியமான அம்சம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தை பருவத்தில் உங்கள் குழந்தையின் எலும்புகளும் பற்களும் வலிமையாக இருந்தால்தான் முதுமையில் அவை எளிதாக உடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும்.

1-3 வயது குழந்தைகளுக்கு தினசரி 700 மி.கி கால்சியமும், 4-8 வயது குழந்தைகளுக்கு, கால்சியத்தின் தினசரி ஆயிரம் மில்லிகிராமாகவும்,9-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 1300 மில்லிகிராம் கால்சியம் (Calcium) தேவைப்படுகிறது.

பி 12 மற்றும் பிற வைட்டமின்கள்
வளர்சிதை மாற்றம், ஆற்றல், ஆரோக்கியமான இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு வைட்டமின் பி முக்கியமானது. பி 12 அத்தியாவசிய வைட்டமின் பி இல் கணக்கிடப்படுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தினமும் 0.5 மைக்ரோகிராமும், 4-8 வயதுடைய குழந்தை தினமும் சுமார் 1.2 மைக்ரோகிராமும், 9-13 வயது குழந்தை தினசரி 1.8 மைக்ரோகிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஈ
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வைட்டமின் ஈ அவசியம். இது இரத்த வடிகால்களை சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

1-3 வயது குழந்தைகளுக்கு தினசரி 9 இண்டர்னேஷனல் யூனிட்டுகள் (அளவீடு), 4-8 வயது வரையிலான குழந்தைகள் 10.4 இண்டர்னேஷனல் யூனிட்டுகளும், 9-13 வயதுடைய குழந்தைகளுக்கு 16.4 இண்டர்னேஷனல் யூனிட்டுகள் தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE