புதிய ஒமிக்ரோன் திரிபு வைரஸ் BF.7 நோர்வேயில் பரவுகிறது என நோர்வே சுகாதார திணைக்களம் FHI தெரிவிக்கிறது.
புதிய ஒமிக்ரோன் திரிபு வைரஸ் BF.7 நோய்த்தொற்று ஐரோப்பா முழுவதும் பரவி வருகிறது. இப்போது நோர்வேயிலும் மக்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது. ஆயினும் இந்த புதிய திரிபு வைரசுக்கு எதிராக எந்தளவு தடுப்பூசி போராடும் என்பது தெளிவுபடவில்லை.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள், புதிய திரிபுகள் உருவாக்குவது இயற்கையானது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அதைச் செய்திருக்கிறது. இது முற்றிலும் இயற்கையான வளர்ச்சியாகும் என நோர்வே சுகாதார திணைக்கள உதவி இயக்குனர் Espen Rostrup Nakstad தெரிவித்துள்ளார்.
நாம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி விளைவிலிருந்து தப்பிக்க வைரஸ் முயற்சிப்பதால், மாற்றங்கள் வருகின்றன. வைரஸ் அத்தகைய மாற்றங்களைச் செய்வது முற்றிலும் இயற்கையானதே எனவும் FHI கூறுகிறது.