நோர்வே சுகாதார நிறுவனம் FHI இனது புதிய மதிப்பீட்டின்படி இந்த குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குளிர்காலத்தில், Influensa, RSV தொற்று மற்றும் இருமல் ஆகிய தொற்றுநோய்களும் பரவலாம்.
கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட இனிமேல் ஏற்படும் Influensa, RSV தொற்று மற்றும் இருமல் ஆகியன உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எனவே 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஆபத்து குழுவில் உள்ளவர்களும் நான்காவது டோஸ் ஊசி எடுப்பது மிகவும் முக்கியம் எனவும் நோர்வே சுகாதார நிறுவனம் FHI பரிந்துரைக்கிறது.