75 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியின் புதிய டோஸ் (டோஸ் 4)

யூலை 1 முதல், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியின் புதிய டோஸ் (டோஸ் 4) எடுக்குமாறு தேசிய சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.
மூன்றாம் மற்றும் நான்காம் புதுப்பிப்பு தடுப்பூசிகளுக்கு (டோஸ் 3 மற்றும் 4) இடையே குறைந்தபட்ச இடைவெளி நான்கு மாதங்கள் இருத்தல் வேண்டும்.

1947 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் சமீபத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், புதிய புதுப்பிப்பு தடுப்பூசிக்கான பரிந்துரை பொருந்தும். நீங்கள் கொரோனா நோயிலிருந்து மீண்டது முதல் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வரையிலான குறைந்தபட்ச இடைவெளி மூன்று வாரங்கள் ஆகும். சோதனை செய்யப்பட்ட கோவிட்-19 மற்றும் ஒரு புதிய தடுப்பூசி டோசுக்கு இடையேயான நீண்ட இடைவெளி பொதுவாக சிறந்த பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்று FHI சுட்டிக்காட்டுகிறது.

ஏப்ரல் மாதத்தில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது புதுப்பிப்பு தடுப்பூசியை (டோஸ் 4) பெற அதிகாரிகள் அனுமதித்தனர். நீங்கள் ஏற்கனவே இந்தச் சலுகையை ஏற்றுக்கொண்டிருந்தால், இப்போது பெற வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் டோஸ் 4ப் பெற விரும்பினால், யூலை 1 முதல் பேர்கனில் Øvre Dreggsallmenningen 6 இல் உள்ள தடுப்பூசி நிலையத்தில் முன்கூட்டியே சந்திப்பை முன்பதிவு செய்யாமல் செல்லலாம். “டிராப்-இன்” பிரிவில் திறக்கும் நேரங்களைப் பார்க்கவும்.

நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், கொரோனா தொலைபேசி எண் 55 56 77 00 ஐ அழைக்கலாம் அல்லது koronovaksine@bergen.kommune.no க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். முக்கியமான தகவல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சில மருந்தகங்களிலும் புதிய புதுப்பிப்பு டோஸ் (டோஸ் 4) பெறலாம்.
பெர்கனில் உள்ள பல குடும்ப வைத்தியர்கள் தங்கள் நோயாளிகளுக்கு தடுப்பூசியை வழங்குகிறார்கள்.

முதியோர் இல்லங்களிலும் வீட்டுப் பராமரிப்பிலும் உள்ள
முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE
Audio Player