சுவாச மற்றும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டாலோ
கொரோனா நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்டாலோ தனிமைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆனால் நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் :
நோய்க்கான அறிகுறிகளைக் கொண்ட பெரியவர்கள் சுய பரிசோதனை (selv test)செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நலம் பெறும்வரை வீட்டிலேயே இருங்கள், 24 மணிநேரம் காய்ச்சல் இல்லாமல் இருக்கிறீர்களா என அவதானித்துக் கொள்ளுங்கள். இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் பொருந்தும். தடிமன், குறட்டை, தொண்டை கரகரப்பு மற்றும் இலேசான இருமல் போன்ற அறிகுறிகளை நீங்கள் ஓரளவு இலகுவாக எடுத்துக் கொள்ளலாம்.
கோவிட்-19க்கு நேர்மறை சோதனை (Positiv) தோன்றினால்:
உங்கள் நகரசபை இணைய தளத்தின் ஊடாக பதிவு செய்துகொள்ளுங்கள். (Selvregistrering av koronatester og nærkontakter)
அத்துடன் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து அல்லது உங்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் நேர்மறை சோதனை (Positiv) கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து நீங்கள் வீட்டிலேயே இருத்தல் நல்லது. இந்தப் படிவத்தில் நேர்மறையான பதிலைப் பதிவுசெய்து, நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உங்கள் நெருங்கிய தொடர்புகளுக்குத் தெரிவிக்கவும். வேலைக்குத் திரும்புவதற்கு முன் 24 மணிநேரம் காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். நெருங்கிய தொடர்புகளுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை.