அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி எடுக்க வேண்டும் என நோர்வே சுகாதார மையம் FHI பரிந்துரைக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் மூன்று டோஸ்களையும் எடுக்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் பகுதியிலேயே தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசியானது கடுமையான நோயிலிருந்து தாயைப் பாதுகாக்கிறது. வயிற்றில் உள்ள குழந்தை தாய் வழியாக எதிர்ப்பு சக்தியினைப் பெற்றுக் கொள்ளும், இதனால் குழந்தை பிறந்த பிறகு பாதுகாக்கப்படுகிறது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் பேறுகாலத்துக்கு முன்கூட்டிய பிறப்பு ஆகியவற்றின் ஆபத்து இருக்காது எனவும் தெரிவிக்கப் படுகிறது.
ஒரே வயதுடைய கர்ப்பிணி அல்லாத பெண்களை விடவும், கர்ப்பம் ஆகிய பெண்களே அதிகம் கோவிட்-19 நோயினால் பாதிக்கப் படுகின்றனர். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் சுவாசிக்க கடினப்படுவதாகவும், அதற்கு செயற்கை உதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே நோர்வே சுகாதார மையம் (FHI) கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசியை பரிந்துரைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பு ஊசிகளை பெற்றுக் கொள்ளாது, கோவிட்-19 தொற்றுமானால், அவர்களுக்கு பேறுகாலத்துக்கு முன்கூட்டிய குழந்தை பிறப்பதற்கான அதிக ஆபத்து இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.