கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரோன் மாறுபாடு இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த வாரத்தில் St. Olav மருத்துவமனை ஆய்வு செய்த பெரும்பாலான மாதிரிகள் BA.2 என்ற பெயருடன் புதிய ஓமிக்ரோன் மாறுபாடு ஆகும்.
ஆனால் கவலைப்படத் தேவையில்லை. வைரஸ் மாறுபாடு மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது.
முதல் ஓமிக்ரான் மாறுபாட்டை விட இது மிகவும் எளிதாகப் பரவுகிறது என்பதைக் குறிக்கும் தரவுகள் உள்ளன. ஆனால் உறுதியாக கூற முடியாது என்று St.Olav மருத்துவமனையின் மருத்துவ நுண்ணுயிரியல் துறையின் தலைமை மருத்துவர் Hans-Johnny Schjelderup Nilsen, NRK செய்தி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.