கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அமெரிக்க ராணுவத்தில் இருந்து பணி நீக்கப்படுவார்கள் என அமெரிக்க ராணுவ செயலர் கிறிஸ்டின் வார்முத் எச்சரித்துள்ளது.
உலகிலேயே அதிகளவிலான கோவிட் பாதிப்பு உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், தடுப்பூசி செலுத்துவோர் குறைவாகவே உள்ளனர். இதனால், தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ செயலர் கிறிஸ்டின் வார்முத் தெரிவிக்கையில், ‛ ராணுவத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களால் படைகளின் மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 3000க்கும் மேற்பட்ட வீரர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்,’ எனத் தெரிவித்தார். முன்னதாக கடற்படை, விமானப்படையை சேர்ந்த வீரர்கள் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.