உலகமே தற்போது கொவிட் தொற்றுநோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு NeoCov என்ற புதிய கொரோனா வைரஸ் பரவுவதாகவும் இது அதிக தொற்று விகிதத்துடன் மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் மற்றும் பல ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, NeoCov மாறுபாடு தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது சுவாச நோய் அறிகுறியான MERS-COV உடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
இருப்பினும், NeoCov புதிய வைரஸ் இல்லை , ஏனெனில் இது மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என ஆய்வுகள் தெரிவிகின்றன
குறித்த NeoCov வைரஸ் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
NeoCov பாதித்த மூவரில் ஒருவருக்கு இறப்பு ஏற்படும் என வுஹான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்