ஆபிரிக்க நாடுகளை தாக்கிய அனா புயல்

தெற்கு ஆபிரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதை தொடர்ந்து பெய்ய மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

மொசாம்பிக்கில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் இங்கு அனா புயலால் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE